Tuesday, 28 August 2012

Those who don't see, hear, speak, do despite having the corresponding limbs.

     விக்கிரக ஆராதனையையும், வழிபாட்டையும் கண்டித்து மறுக்கும் வேதாகமம் விக்கிரக வழிபாட்டை பற்றி குறிப்பிடும் பொழுது அவைகளுக்கு கண்களிருந்தும் காணாது, செவிகளிருந்தும் கேட்காது, வாயிருந்தும் பேசாது, கைகளிருந்தும் எதுவும் செய்யாது, அதனை வழிபடுவோரும், நம்புவோரும்  அவற்றை போன்றே உள்ளார்கள் என்று குறிப்பிடுகிறது. அதுவே சற்று மாறுதலுடன் விக்கிரகங்கள் கற்களால் செய்யப்பட்டவைகள் ஆகையால் அவற்றை வழிபடுவோரும், நம்புவோரும் அவைகளை போன்றே உணர்ச்சியற்றவர்களாயும், இரக்கமற்றவர்களாயும்  இருப்பதாக பரவலாக கையாளப்படுகிறது. அது ஒன்றும் பிரதான விழயமல்ல.

 வேதாகமத்தை கடைபிடிக்கிறவர்களாயினும், விக்கிரக வழிபாட்டில் ஈடுபடுகிறவர்களாயினும் வாழ்க்கையில் தமது பாதுகாப்பையும், முன்னேற்றத்தையும் மட்டுமே தமது லட்சியமாகவும், இலக்காகவும் கொண்டு எந்த ஒரு சூழ்நிலையிலும் தனது பொறுப்புகளையும், கடமையும் மறந்து சமுதாயமும், உலகமும் பன்முகத்தன்மை (புலூரளிசம்) கொண்டது ஆகையால் எந்த ஒரு பிரச்சினையாயினும் இயற்கையாகவோ அல்லது தாமே (அவர்களே) முயன்று தீர்த்து கொள்ளவேன்றுமென்றிருப்பவர்கள் அனைவரும் அத்தகைய விக்கிரகங்களை போன்று அங்கங்களிருந்தும் செயல் படாதவர்கலும், இரக்கம் கொள்ளாமல் இருப்பவர்களும் ஆவார்கள்.

Ups and Downs

     வாழ்வின் ஏற்றங்களும், இறக்கங்களும் 

              மனித வாழ்க்கை ஏராளமான ஏற்றங்களும், இறக்கங்களும் நிறைந்ததொரு நீண்ட மலைப்பாதை போன்றதாகும். வாழ்வில் ஏற்றம் அடையும் பொழுது பெருமிதம் கொள்ளாமலும், தாழ்வடையும் பொழுது தன்னிலை இழக்காமலும் இருக்க வேண்டியது அவசியமானது என்பதே இந்த தத்துவம் போதிக்கும் பாடமாகும். இந்த அறிவுரைக்கு மிகச்சிறந்த உதாரணமாக விளங்குபவர் தமது நெடிய அரசியல் வாழ்க்கையில் பலமுறை முதலமைச்சராகவும் , எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்து வரும் திரு. கருணாநிதி அவர்கள் ஆவார் . 
             மிகச்சிறந்ததொரு அரசியல்வாதியாகவும், பொதுநல தொண்டராகவும் இருந்து வரும் திரு. கருணாநிதி அவர்கள் தம்மை சாமான்யமானதொரு அரசியல்வாதியாக வெளிப்படுத்திக்கொண்டது இரண்டாவது முறை தேசிய முற்போக்கு கூட்டணி அரசு அமைத்த பொழுது புதுடில்லியில் முகாமிட்டு தமது குடும்பத்தாருக்கும், கட்சிக்காரர்களுக்கும் மந்திரி பதவிக்காக பேரம் பேசிய போதாகும் .  அதுவே அவரது வாழ்க்கையில் அடைந்த மிக தாழ்வான நிலை என்று இப்பொழுது டெசோ மாநாட்டை கூட்டியமைக்காக பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்களை சந்திக்கும் பொழுது குறிப்பிடவேண்டியுள்ளது.

Tuesday, 7 February 2012

தமிழ் திரைப்படத்துக்கு ஆஸ்கார் பரிசு

தமிழ் திரைப்படங்களுக்கு ஆஸ்கார் பரிசு கிடைக்க வாய்ப்பு உள்ளதா?

நிச்சயமாக. முதலில் மூணு சண்டை, நாலு பாடல், அரை மணி நேரம் காமெடி என்று சூத்திரப்படி (பார்முலா) படமெடுப்பதை கைவிட வேண்டும், அப்பறம் ஹீரோவுக்காஹா கதை எழுதுவதை தள்ளி வைக்க வேண்டும். இப்படி சில சிறிய சுலபமான மாற்றங்களை செய்தால் தமிழ் திரைப்படங்களுக்கு ஆஸ்கார் பரிசு கிடைக்க  நிச்சயம் வாய்ப்பு உள்ளது.


Friday, 13 January 2012

கேள்வி பதில்

இந்தியா டுடே ஜனவரி ௧௮ இதழின் முகப்பு கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ள திருப்பமும் திசையும் என்னும் செய்தி தொகுப்பின் பலகணியில்  பின்வரும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கட்சியிலும் , ஆட்சியிலும் அதீத தலையீடு செய்த உடன் பிறவா சகோதரி சசிகலா மற்றும் அவரது உறவினர்களை வெளியேற்றிய பிறகு முதல்வர் ஜெ.ஜெயலலிதா எந்த திசையில் பயணிப்பார்?

இந்த கேள்விக்கான பதிலை தெரிவிக்க நீங்கள் எனக்கு ஒரு குறிப்புதவி செய்யவேண்டும். அதாவது இதுவரையிலும் அவர் எந்த திசையில் பயணம் செய்து கொண்டிருந்தார் என்பதே அது.

Tuesday, 10 January 2012

ஒய் திஸ் கொலவெறி

நிச்சயமாக இந்த தலைப்புக்குரிய விஷயம்  நடிகர் தனுஷ் இயற்றி பாடிய பாடல் பற்றிய திறனாய்வு இல்லை. ஆனால் கடலூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மக்களின் வாழ்வாதாரங்களை சிதைத்து சின்னாபின்னமாக்கிய தானே புயலின் கொலவெறி பற்றியும் அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் காலதாமதம் செய்து வரும் மத்திய மாநில அரசுகளின் மெத்தனமான போக்கை கண்டித்து சாலை மறியல் போன்ற ஏராளமான போராட்டங்களில் ஈடுபட்டு வரும் பொதுமக்களின் (கொ)கலவெரி பற்றியும், தனது கர்ப்பிணி மனைவி நித்யாவின் மரணத்திற்கு காரணமாயிருந்ததாக நினைத்து தூத்துக்குடி பெண் மருத்துவர் சேதுலக்ஷ்மியின் கொலை செய்த மகேஷ் மற்றும் அவருடைய கூட்டாளிகளின் கொலவெறி பற்றியும் அதனை தொடர்ந்து தங்கள் சுயநலத்திற்காகவும் , பாதுகாப்பிற்காகவும் தாங்கள் மேற்கொண்ட தொழிலின் இலட்சியத்தையும் , சிறப்பையும் தள்ளிவிட்டு அப்பாவி நோயாளிகளை சிரமத்திற்குள்ளாக்கிய மருத்துவ சங்கத்தினரின் கொலவெறி வேலைநிறுத்தம் பற்றியும் , தூய்மையான அரசியல்வாதியாகிய முதலமைச்சர் ஜெயலலிதாவை இழிவு படுத்தும் நோக்கில் ஆதாரமற்ற சில விஷயங்களை வெளியிட்டதாக கூறி நக்கீரன் பத்திரிகை அலுவலகத்தை முற்றுகையிட்டு கலவரத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளின் கொலவெறி பற்றியும் , (முல்ல)பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு மற்றும் பொதுமக்களின் நிலையில் குழப்பத்திற்கிடமிருந்தபோதிலும் அதனை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள், அரசியல் கட்சிகள் ஊடகங்கள் தங்கள் ஆதாயத்திற்கேற்ப பொதுமக்களின் கொலவெரிக்கு -கடைகளை சூறையாடுவது, பக்தர்களை தாக்குவது போன்ற - பக்கபலமாயிருப்பது போன்ற விஷயங்களை விவாதம் செய்யவேண்டியே இந்த  தலைப்பில், இப்படியொரு திறனாய்வு செய்ய நேர்ந்தது.

Thursday, 15 December 2011

ஆயிரம் உண்டிங்கு ஜாதி

ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில் அன்னியர் வந்திங்கு புகல் என்ன நீதி? என்று பாடினார் மகாகவிஞர். பாரதியாரை போலவே இந்தியாவிலுள்ள வைதீகர்கள் அனைவரும் -ஏனையோரைப்போலவே அரசாங்கத்தில் உயர் பதவி வகித்தவர் தவிர- பிரிட்டிஷ் காலநியாட்சிக்கு எதிரான இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆர்வத்துடன் ஈடுபட்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். பிராம்மணர்கள் ஐரோப்பவிலிருந்தோ  மேற்கு ஆசியவிலிருந்தோ  இந்தியாவிற்குள் வந்த ஒரு இனத்தை சேர்ந்தவர்கள் என்று அபிப்பிராயம் செய்துகொள்வது அவர்களுடைய கொள்கைகளையும், செய்கைகளையும் புரிந்து கொள்வதற்கு இடைஞலானதாகும். பிராம்மணர்கள் தங்கள் சிறப்பையும், உயர்குடி பெருமையையும் தக்கவைத்துகொள்வதற்காகவும், பாதுகாக்கவும் அரசாங்கம், அறிவியல், சட்டம் போன்ற சமுதாய துறைகளிலும், இசை, நாட்டியம், ஓவியம், சிற்பம் போன்ற நுண்கலைகளிலும் தங்களுக்குரிய திறமைகளை தனித்துவ படுத்திகொள்வதுடன், பொதுமக்களுக்கு சாமான்ய விஷயங்களில் உள்ள ஈடுபாட்டை பயன்படுத்தி, அவர்களை முன்னேற விடாமல் தடுத்து வருவதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

Thursday, 17 November 2011

தமிழகத்தின் மின் பற்றாக்குறையை சமாளிப்பது எப்படி?

தமிழ்நாட்டில் கூடங்குளம் அணு மின் நிலைய திட்டத்தை நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக சொல்லப்படும் காரணங்களில் ஒன்று தமிழகத்தின் மின் பற்றாக்குறையை சமாளிக்க இந்த திட்டம் அவசியமானது என்பதாகும். தமிழகத்தின் தற்போதைய மின் தேவை 11,500* மெகாவாட்கள் என்றும் இதில் 9,000 மெகாவாட்கள் மட்டுமே தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கிடைப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் 2,500 மெகாவாட்கள் மின் பற்றாக்குறை நிலவி வருவதாகவும்  இதனாலேயே மின்வெட்டு அமல் செய்யப்படுவதாகவும்  கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் நெய்வேலியில் அமைந்துள்ள மத்திய அரசின் 4 மின் நிலையங்களில் இருந்து 4,000 மெகாவாட்கள் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதிலிருந்து 25 சதவீதம் அதாவது ௧௦௦1,000 மெகாவாட்கள் மட்டுமே தமிழகத்துக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு எஞ்சியுள்ள 3,000 மெகாவாட்கள் மின்சாரம் ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநில மின் திட்டத்திற்கு வழங்கப்படுகிறது. நெய்வேலியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திலிருந்து கூடுதலாக 1,500௦௦ மெகாவாட்கள் தமிழகத்துக்கு வழங்கினாலே தமிழகத்தின் மின் பற்றாக்குறையை முழுவதுமாக சமாளிக்க முடியும். இதனை செயல் படுத்த விரும்பாத மத்திய, மாநில அரசுகள் கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் 2,000 மெகாவாட்கள் மின்சாரத்திலிருந்து  தமிழகத்திற்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ள 900மெகாவாட்கள் மின்சாரத்தின் மூலம் தமிழகத்தின் மின் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என்று கூறுவதை எப்படி நம்ப முடியும்?
*புள்ளி விபரங்கள் தோராயமானவையாகும்

எமக்கு தொழில் கனவு

எல்லா மனிதர்களும் கனவு காண்பதாக விஞ்ஞான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏராளமான மனிதர்கள் தங்கள் லட்சியத்தை பற்றி கனவு காண்கிறார்கள் அதை அடையும் வழிமுறைகளை பற்றி கனவு காண்கிறார்கள், அதில் வெற்றியும் அடைகிறார்கள் ஆனால் எனக்கு கனவு காண்பதே வாழ்க்கையாகி போனது தான் விந்தை.

Monday, 14 November 2011

அடிப்படை மாற்றம்

ஒரு கையிலுள்ள ஐந்து விரல்களும் ஒன்று போல் இருப்பதில்லை என்கிற விஷயம் உலகிலுள்ள வேறுபாடுகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் விளக்குவதற்கு மிகச்சிறந்த ஒரு உவமையாக கையாளப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஐந்து விரல்களுக்குள் சிறப்பான ஒன்றை தேர்வு செய்ய முடியுமா?

Saturday, 5 November 2011

மகத்தானதொரு செய்தி உணவு

உணவு ஆர்வலர்களுக்கு உற்சாகமூட்டும் மகத்தானதொரு செய்தி ஒன்றை  நோபல் குழு அறிவித்துள்ளது. நோபல் கொண்டாட்ட சிறப்பு விருந்தினை புதுடில்லி மற்றும் உள்ளூர்களிலேயே(தலை நகரங்கள் மட்டும் ) ரூ8,000/ விலையில் வழங்க முடிவு செய்துள்ளது. இது சில சக்தி வாய்ந்த பெரிய நிறுவனங்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களிடையே மட்டும் சிறிது ஆட்சேபனையையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தி இருக்கும் என்று நம்புகிறேன். கட்டுப்பாடற்ற சந்தையில் இரண்டு அல்லது மூன்று மடங்கு செலவு பிடிக்கக்கூடிய அல்லது வருமானம் ஈட்டக்கூடிய மிகச்சிறப்பானதொரு விருந்தினை இவ்வளவு மலிவான விலையில் விற்கலாமா என்பதே அவர்கள் ஆட்செபனையின் காரணமாக இருக்கக்கூடும்.


Friday, 4 November 2011

2,76000,0000000

   மேலே குறிப்பிட்டுள்ள எண் எவ்வாறு தோற்றமளிக்கிறது என்று நீங்கள் உணர்கிறீர்கள்? மேலே குறிப்பிடப்பட்டுள்ள எண் அதன் கணக்கீட்டு அலகிற்கு ஏற்ப பகுப்பு செய்யப்பட்டுள்ளது. அதாவது இரண்டு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி என்று படிக்கலாம். இதே என்னை நீங்கள் பில்லியன் கணக்கில் வெளியிட விரும்பினால் பின் வருமாறு பகுப்பு செய்யலாம். 2,760,௦௦௦௦௦௦௦௦௦000000000 அதாவது இரண்டாயிரத்து எழுநூற்று அறுபது பில்லியன். Like it?

Monday, 31 October 2011

Saturday, 29 October 2011


007-3


007-2


007-1


Thursday, 20 October 2011

Tuesday, 11 October 2011

தமிழ் இலக்கியத்தில் காமம்

'ச்வியர் வோர்ட்ஸ்' எனக்கூடிய அப்பட்டமான வார்த்தைகள் நிரம்பிய பொருந்தாக்காமம் உள்ளிட்ட அனைத்து வகையான உடல் உறவு கதைகளும் காம உணர்வுகளை எழுப்பும் வண்ணம் இக்காலத்தில் ஏராளம் புனையப்பட்டு இன்று இணையதளத்தையும் ஆக்கிரமித்து கொண்டுள்ளது. இந்த கதைகளுக்கு அதிக வரவேற்போ பெரிய அளவில் வாசகர் வட்டமோ இல்லை என்ற போதிலும் அடித்தட்டு மக்களின் அந்தரங்கமான ஆசைகளின் பிரதிபலிப்பாக விளங்குவது இதன் சிறப்பம்சமாகும். பழங்கால தமிழ் இலக்கியங்களில் ஆண், பெண் அங்க அவயங்கள் பற்றிய வர்ணனைகளும், உடல் உறவு பற்றிய குறிப்புகளும் ஏராளம் நிறைந்து காணப்படுகின்றன.அவைகள் எதுவும் பாலுணர்வுகளை தூண்டக்கூடியனவாக இல்லை. பொருந்தாக்காமம் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன. அவ்வகியான உறவுகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதும் இங்கு உணர்ந்து கொள்ளவேண்டிய விஷயமாகும்.

Cheeky quote

What do you do if somebody fits your name?

Saturday, 8 October 2011

Cheeky quote

 They are powerful and successful and i am not is the difference between myself and philosophers.

காதலும் கடவுளும்

முழுவதும் முழு நாத்திகர்களால் ஆகிய தேசத்தை கூட காதல் கடவுளின் பக்கம் திருப்புகிறது. 

Thursday, 6 October 2011

Just like that

If you have health you can command your job, if you have wealth you can command your family, if you have ethics you can command your society, if you have power you can command the world.

Friday, 26 August 2011

விலக்கப்பட்ட கனி

இப்பொழுது முக்கியமாக விவாதிக்கப்பட்டு வரும் லோக்பால் மசோதா , நீதிபதிகள் நியமனம், நீதித்துறையில் ஊழல் போன்ற விஷயங்களில் பாராளுமன்றம் , நீதித்துறைகளுக்கு இடையிலான அதிகார எல்லை, அதிகார பகிர்வு, மற்றும் உபயோகம் குறித்து நிபுணர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதற்கு ஆதாரமாக இந்திய அரசியல் சாசனம் அளித்துள்ள நெறிமுறைகள் மற்றும் விதிகளை அடிப்படையாக கொண்டுள்ளார்கள்.  நாடாளுமன்றம் மற்றும் நீதித்துரைகளுக்கிடையிலான அதிகார எல்லை மற்றும் அதிகார பகிர்வு குறித்து பேசும்பொழுது முக்கியமான ஒரு உண்மை மறுக்கப்படுகிறது அல்லது மறைக்கப்படுகிறது.  அரசாங்கத்திலோ அல்லது நீதித்துரையிலோ தவறுகள் நடப்பது தெரிய வரும்பொழுது அதனை தெரிந்துகொள்வதற்கும் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு யாருக்கும் ஏற்ற உரிமை இறுப்பதுபோலவே இந்த அமைப்புகளுக்கும் உண்டு.  நாடாளுமன்றத்திற்கும் நீதித்துறைக்கும் உரிய அதிகாரங்களை தங்களுக்கு சொந்தமானதாகவும் அதன் நெறிமுறைகளை தேவைக்கு அப்பால் தங்கள் ஆதாயத்திற்கேற்ப வியாக்கியானமளிப்பதும் ஆதிக்க அதிகார இச்சையுடைய சிந்தனையே ஆகும். அரசியல் சாசனம் அளித்துள்ள அதிகாரங்களை அதில் கூறப்பட்டுள்ள நெரிமுரைகளைக்கொண்டு எவ்வாறு உபயோகிப்பது என்ற தெளிவின்றி உரிமை மீறல் மற்றும் அதிகார துஷ்ப்ரயோகம் என்று குறை கூறுவதும் தங்களுக்கென்று தனிப்பட்ட அதிகார எல்லைக்கூட்டை தேடிக்கொள்வதும் ஜனநாயக மரபுகளுக்கு எதிரானதாகும்.

Monday, 1 August 2011

இந்துக்கள் ஆரியர்களா?

பிராம்மணர்கள் உலகெங்கிலுமுள்ள மக்கள் தொகையில் தனியொரு பிரிவினராக என்னப்படுவதர்க்கான  சாத்தியகூறுகளே அதிகம் உள்ளன. பிராம்மணர்கள் தங்களுக்கென்று தனியானதொரு கலாச்சாரமும் அடையாளமும் கொண்டிருப்பதால் மத்திய ஆசியாவிலும் மேற்கு ஆசியாவிலும் உள்ள முஸ்லிம் மக்களும் ஐரோப்பாவில் உள்ள கிறிஸ்தவ யூத இன மக்களும் வடக்கு ஆசியாவில் உள்ள மங்கோல் மக்களும் அவர்கள் தங்கள் இனத்தை சேர்ந்தவர்களே என்று அடையாளம் கொள்ளமுடியாத நிலைமையே யதார்த்தமாய் உள்ளது. பிராம்மணர்கள் இந்தியாவின் பூர்வ குடிகள் அல்ல என்னும் கருத்தை சற்று தள்ளிவைத்துவிட்டு பார்ப்போமானால் அவர்கள் இந்தியா முழுவதும் தங்கள் மதத்தை ஸ்தாபனம் செய்து ஆட்சி அதிகாரங்களையும் இன்ன பிற உரிமைகளையும் சுயபோகமாய் அனுபவித்து வருவது தெரியும். ஆனால் இந்து மதத்தின் கொள்கைகள் எந்த அளவுக்கு நடைமுறைக்கு உகந்தன அல்லவென்பது ஆராய்ச்சிக்குரியதொரு விஷயமாகும். பிரம்மச்சரியமும் முக்தியும் இந்து மதத்தின் பிரதான கொள்கைகலேன்ற  நோக்கில் பார்த்தால் பிராம்மணர்கள் அனைவரும் பிரம்மச்ச்சரிகளில்லைஎன்பதும் வேத காலத்திலிருந்தே அவர்கள் சம்சாரத்தில் ஈடுபட்டு குல விருத்தி செய்தார்களென்பதை  புரிந்து கொள்ள முடியும். ஆதிசங்கரர் தான் முதன் முதலாய் முழு பிரம்மச்சரியத்தில் ஈடுபட்டவர் என்பதாலேயே அவரது மடத்திற்கு முக்கியத்துவமும் பெருமையும் வழங்கப்பட்டு வருகிறது. மதத்தினால் உருவாக்கப்பட்டுள்ள தீமைகளை எதிர்த்து போராட வேண்டுமெனில் அவர்கள் ஆரியர்கள் என்ற கருத்தை தள்ளிவைக்க வேண்டியது அவசியமாகிறது. அந்த காரணத்தினாலேயே பெரியார் அவர்கள் துவக்கிய சுயமரியாதை இயக்கம் பின்னுக்கு தள்ளப்பட்டு திராவிட முன்னேற்ற கழகம் மக்கள் மனதில் அதிக இடம் பிடித்தது. இன்று இந்தியாவின் சமுதாய , அரசியல், பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியாகவும் இந்திய துணைகண்டம் என்னும் பூகோள ரீதியாகவும் தீர்வு காண்பதே விஞ்ஞானபூர்வமானதாகும்  

கானகத்து நீதி

பெரியார் அவர்கள் தாம் செய்து வந்த சமூகப்பணியை பற்றி குறிப்பிடும்பொழுது மத போதகர்களால் உருவாக்கப்பட்ட வர்ண பேதங்களையும் அதனை தொடர்ந்த ஜாதி கொடுமைகளையும் சமூக கட்டுப்பாடுகளையும்  எதிர்த்து போராடுவதற்கு யாரும் முன்வராத காரணத்தினாலும்,  அதைப்பற்றிய அக்கறையும், தன்மான உணர்வும் யாருக்கும் இல்லாததாலும்  தாமே முன்வந்து அந்தப்பணியை  செய்து வருவதாக குறிப்பிட்டார் . இன்றும் அதே போன்றதொரு நிலமையே இந்தியா முழுவதும் நிலவி வருவதை நாம் காணலாம். இந்திய ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் தங்கள் கடமையையும் பொறுப்பையும் மறந்து, தேசத்தையும் ,மக்களையும் புறக்கணித்துவிட்டு  சுய முன்னேற்றம் ஒன்றே உலகில் சாதனைக்குரிய விஷயம் என்று நினைத்து செயல்பட்டு வருவது கானகத்து நீதியே என்று நம்மை எண்ணவைக்கிறது.


Friday, 29 July 2011

vuvamaiyum vilakkamum

ஒரு கையிலுள்ள ஐந்து விரல்களும் ஒன்று போல இருப்பதில்லை என்னும்  வுவமை   நாம் காணக்கூடிய உலகின்  தன்மையை மிக சிறப்பாய் உணர்த்தக்கூடியது ஆகும். ஆனால் இதுவே எப்போதும் நிலையான அளவீடும்  இல்லை செரிவானதும் அல்ல.  

Tuesday, 26 July 2011

சட்டமும் திட்டமும் செல்லும் இடம்

தகவலறியும் உரிமை சட்டம் , அனைவருக்கும் கல்வி சட்டம் ஆகிய சட்டங்களை தொடர்ந்து தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் ஒன்றை பாராளுமன்ற மழைக்கால கூட்ட தொடரில் கொண்டு வர உத்தேசித்திருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது . ஏற்கெனவே   பொது விநியோக திட்டத்தின் கீழ் மத்திய அரசால் கொள்முதல் செய்யப்பட்டுள்ள கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள லட்சக்கணக்கான டன் உணவுபொருட்கள் மக்கிபோய் உணவுபொருட்களை உற்பத்தி செய்த விவசாயிகளின் ஆன்மாவையும் பசிக்கு உணவில்லாத ஏழை மக்களின் மனசாட்சியையும் துன்புறுத்தும் விதமாக நடந்து கொண்டு வருவது அனைவரும் நன்கறிந்த விஷயமாகும் .   எந்த சட்டமானாலும், திட்டமானாலும் மக்களுக்கு பயனுறும்  வண்ணம் மக்களை சென்றடைய வேண்டியதே இப்போதைய தேவையாகும்.



Friday, 22 July 2011

க்நோம்ஸ் ஆப் இந்துஸ்தான்

க்நோம்ஸ்ஆப் ஜுரிச்  என்பது ஜுரிச் நகரின் பிசாசுகள் என்ற பெயரில் ஸ்விஸ் வங்கி அதிகாரிகளை குறிக்கும் நகைச்சுவை சொற்றொடராகும் . ஸ்விஸ் வங்கிகளில் முதலீடு செய்துள்ள   அரசியல்வாதிகள் அதிகாரிகள் பணக்காரர்கள் ஆகியோரின் கருப்பு பணம் பற்றிய அளவுகளில் வேறுபாடு இருந்தாலும் சுவிஸ் அதிகாரிகள் கருப்பு பணம் பற்றிய தகவல்களை வெளியிடுவதற்கும் உரிமை மாற்றம் செய்வதற்கும்முன் வந்துள்ள நிலையில் இந்திய அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அதற்கு முன்வராதிருக்கும்போழுது அவர்களை க்நோம்ஸ் ஆப் இந்துஸ்தான் என்று ஏன் அழைக்ககூடாது?