பெரியார் அவர்கள் தாம் செய்து வந்த சமூகப்பணியை பற்றி குறிப்பிடும்பொழுது மத போதகர்களால் உருவாக்கப்பட்ட வர்ண பேதங்களையும் அதனை தொடர்ந்த ஜாதி கொடுமைகளையும் சமூக கட்டுப்பாடுகளையும் எதிர்த்து போராடுவதற்கு யாரும் முன்வராத காரணத்தினாலும், அதைப்பற்றிய அக்கறையும், தன்மான உணர்வும் யாருக்கும் இல்லாததாலும் தாமே முன்வந்து அந்தப்பணியை செய்து வருவதாக குறிப்பிட்டார் . இன்றும் அதே போன்றதொரு நிலமையே இந்தியா முழுவதும் நிலவி வருவதை நாம் காணலாம். இந்திய ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் தங்கள் கடமையையும் பொறுப்பையும் மறந்து, தேசத்தையும் ,மக்களையும் புறக்கணித்துவிட்டு சுய முன்னேற்றம் ஒன்றே உலகில் சாதனைக்குரிய விஷயம் என்று நினைத்து செயல்பட்டு வருவது கானகத்து நீதியே என்று நம்மை எண்ணவைக்கிறது.
No comments:
Post a Comment