உணவு ஆர்வலர்களுக்கு உற்சாகமூட்டும் மகத்தானதொரு செய்தி ஒன்றை நோபல் குழு அறிவித்துள்ளது. நோபல் கொண்டாட்ட சிறப்பு விருந்தினை புதுடில்லி மற்றும் உள்ளூர்களிலேயே(தலை நகரங்கள் மட்டும் ) ரூ8,000/ விலையில் வழங்க முடிவு செய்துள்ளது. இது சில சக்தி வாய்ந்த பெரிய நிறுவனங்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களிடையே மட்டும் சிறிது ஆட்சேபனையையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தி இருக்கும் என்று நம்புகிறேன். கட்டுப்பாடற்ற சந்தையில் இரண்டு அல்லது மூன்று மடங்கு செலவு பிடிக்கக்கூடிய அல்லது வருமானம் ஈட்டக்கூடிய மிகச்சிறப்பானதொரு விருந்தினை இவ்வளவு மலிவான விலையில் விற்கலாமா என்பதே அவர்கள் ஆட்செபனையின் காரணமாக இருக்கக்கூடும்.