நிச்சயமாக இந்த தலைப்புக்குரிய விஷயம் நடிகர் தனுஷ் இயற்றி பாடிய பாடல் பற்றிய திறனாய்வு இல்லை. ஆனால் கடலூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மக்களின் வாழ்வாதாரங்களை சிதைத்து சின்னாபின்னமாக்கிய தானே புயலின் கொலவெறி பற்றியும் அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் காலதாமதம் செய்து வரும் மத்திய மாநில அரசுகளின் மெத்தனமான போக்கை கண்டித்து சாலை மறியல் போன்ற ஏராளமான போராட்டங்களில் ஈடுபட்டு வரும் பொதுமக்களின் (கொ)கலவெரி பற்றியும், தனது கர்ப்பிணி மனைவி நித்யாவின் மரணத்திற்கு காரணமாயிருந்ததாக நினைத்து தூத்துக்குடி பெண் மருத்துவர் சேதுலக்ஷ்மியின் கொலை செய்த மகேஷ் மற்றும் அவருடைய கூட்டாளிகளின் கொலவெறி பற்றியும் அதனை தொடர்ந்து தங்கள் சுயநலத்திற்காகவும் , பாதுகாப்பிற்காகவும் தாங்கள் மேற்கொண்ட தொழிலின் இலட்சியத்தையும் , சிறப்பையும் தள்ளிவிட்டு அப்பாவி நோயாளிகளை சிரமத்திற்குள்ளாக்கிய மருத்துவ சங்கத்தினரின் கொலவெறி வேலைநிறுத்தம் பற்றியும் , தூய்மையான அரசியல்வாதியாகிய முதலமைச்சர் ஜெயலலிதாவை இழிவு படுத்தும் நோக்கில் ஆதாரமற்ற சில விஷயங்களை வெளியிட்டதாக கூறி நக்கீரன் பத்திரிகை அலுவலகத்தை முற்றுகையிட்டு கலவரத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளின் கொலவெறி பற்றியும் , (முல்ல)பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு மற்றும் பொதுமக்களின் நிலையில் குழப்பத்திற்கிடமிருந்தபோதிலும் அதனை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள், அரசியல் கட்சிகள் ஊடகங்கள் தங்கள் ஆதாயத்திற்கேற்ப பொதுமக்களின் கொலவெரிக்கு -கடைகளை சூறையாடுவது, பக்தர்களை தாக்குவது போன்ற - பக்கபலமாயிருப்பது போன்ற விஷயங்களை விவாதம் செய்யவேண்டியே இந்த தலைப்பில், இப்படியொரு திறனாய்வு செய்ய நேர்ந்தது.