ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில் அன்னியர் வந்திங்கு புகல் என்ன நீதி? என்று பாடினார் மகாகவிஞர். பாரதியாரை போலவே இந்தியாவிலுள்ள வைதீகர்கள் அனைவரும் -ஏனையோரைப்போலவே அரசாங்கத்தில் உயர் பதவி வகித்தவர் தவிர- பிரிட்டிஷ் காலநியாட்சிக்கு எதிரான இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆர்வத்துடன் ஈடுபட்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். பிராம்மணர்கள் ஐரோப்பவிலிருந்தோ மேற்கு ஆசியவிலிருந்தோ இந்தியாவிற்குள் வந்த ஒரு இனத்தை சேர்ந்தவர்கள் என்று அபிப்பிராயம் செய்துகொள்வது அவர்களுடைய கொள்கைகளையும், செய்கைகளையும் புரிந்து கொள்வதற்கு இடைஞலானதாகும். பிராம்மணர்கள் தங்கள் சிறப்பையும், உயர்குடி பெருமையையும் தக்கவைத்துகொள்வதற்காகவும், பாதுகாக்கவும் அரசாங்கம், அறிவியல், சட்டம் போன்ற சமுதாய துறைகளிலும், இசை, நாட்டியம், ஓவியம், சிற்பம் போன்ற நுண்கலைகளிலும் தங்களுக்குரிய திறமைகளை தனித்துவ படுத்திகொள்வதுடன், பொதுமக்களுக்கு சாமான்ய விஷயங்களில் உள்ள ஈடுபாட்டை பயன்படுத்தி, அவர்களை முன்னேற விடாமல் தடுத்து வருவதும் மறுக்க முடியாத உண்மையாகும்.