இப்பொழுது முக்கியமாக விவாதிக்கப்பட்டு வரும் லோக்பால் மசோதா , நீதிபதிகள் நியமனம், நீதித்துறையில் ஊழல் போன்ற விஷயங்களில் பாராளுமன்றம் , நீதித்துறைகளுக்கு இடையிலான அதிகார எல்லை, அதிகார பகிர்வு, மற்றும் உபயோகம் குறித்து நிபுணர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதற்கு ஆதாரமாக இந்திய அரசியல் சாசனம் அளித்துள்ள நெறிமுறைகள் மற்றும் விதிகளை அடிப்படையாக கொண்டுள்ளார்கள். நாடாளுமன்றம் மற்றும் நீதித்துரைகளுக்கிடையிலான அதிகார எல்லை மற்றும் அதிகார பகிர்வு குறித்து பேசும்பொழுது முக்கியமான ஒரு உண்மை மறுக்கப்படுகிறது அல்லது மறைக்கப்படுகிறது. அரசாங்கத்திலோ அல்லது நீதித்துரையிலோ தவறுகள் நடப்பது தெரிய வரும்பொழுது அதனை தெரிந்துகொள்வதற்கும் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு யாருக்கும் ஏற்ற உரிமை இறுப்பதுபோலவே இந்த அமைப்புகளுக்கும் உண்டு. நாடாளுமன்றத்திற்கும் நீதித்துறைக்கும் உரிய அதிகாரங்களை தங்களுக்கு சொந்தமானதாகவும் அதன் நெறிமுறைகளை தேவைக்கு அப்பால் தங்கள் ஆதாயத்திற்கேற்ப வியாக்கியானமளிப்பதும் ஆதிக்க அதிகார இச்சையுடைய சிந்தனையே ஆகும். அரசியல் சாசனம் அளித்துள்ள அதிகாரங்களை அதில் கூறப்பட்டுள்ள நெரிமுரைகளைக்கொண்டு எவ்வாறு உபயோகிப்பது என்ற தெளிவின்றி உரிமை மீறல் மற்றும் அதிகார துஷ்ப்ரயோகம் என்று குறை கூறுவதும் தங்களுக்கென்று தனிப்பட்ட அதிகார எல்லைக்கூட்டை தேடிக்கொள்வதும் ஜனநாயக மரபுகளுக்கு எதிரானதாகும்.
No comments:
Post a Comment