Tuesday, 28 August 2012

Those who don't see, hear, speak, do despite having the corresponding limbs.

     விக்கிரக ஆராதனையையும், வழிபாட்டையும் கண்டித்து மறுக்கும் வேதாகமம் விக்கிரக வழிபாட்டை பற்றி குறிப்பிடும் பொழுது அவைகளுக்கு கண்களிருந்தும் காணாது, செவிகளிருந்தும் கேட்காது, வாயிருந்தும் பேசாது, கைகளிருந்தும் எதுவும் செய்யாது, அதனை வழிபடுவோரும், நம்புவோரும்  அவற்றை போன்றே உள்ளார்கள் என்று குறிப்பிடுகிறது. அதுவே சற்று மாறுதலுடன் விக்கிரகங்கள் கற்களால் செய்யப்பட்டவைகள் ஆகையால் அவற்றை வழிபடுவோரும், நம்புவோரும் அவைகளை போன்றே உணர்ச்சியற்றவர்களாயும், இரக்கமற்றவர்களாயும்  இருப்பதாக பரவலாக கையாளப்படுகிறது. அது ஒன்றும் பிரதான விழயமல்ல.

 வேதாகமத்தை கடைபிடிக்கிறவர்களாயினும், விக்கிரக வழிபாட்டில் ஈடுபடுகிறவர்களாயினும் வாழ்க்கையில் தமது பாதுகாப்பையும், முன்னேற்றத்தையும் மட்டுமே தமது லட்சியமாகவும், இலக்காகவும் கொண்டு எந்த ஒரு சூழ்நிலையிலும் தனது பொறுப்புகளையும், கடமையும் மறந்து சமுதாயமும், உலகமும் பன்முகத்தன்மை (புலூரளிசம்) கொண்டது ஆகையால் எந்த ஒரு பிரச்சினையாயினும் இயற்கையாகவோ அல்லது தாமே (அவர்களே) முயன்று தீர்த்து கொள்ளவேன்றுமென்றிருப்பவர்கள் அனைவரும் அத்தகைய விக்கிரகங்களை போன்று அங்கங்களிருந்தும் செயல் படாதவர்கலும், இரக்கம் கொள்ளாமல் இருப்பவர்களும் ஆவார்கள்.

Ups and Downs

     வாழ்வின் ஏற்றங்களும், இறக்கங்களும் 

              மனித வாழ்க்கை ஏராளமான ஏற்றங்களும், இறக்கங்களும் நிறைந்ததொரு நீண்ட மலைப்பாதை போன்றதாகும். வாழ்வில் ஏற்றம் அடையும் பொழுது பெருமிதம் கொள்ளாமலும், தாழ்வடையும் பொழுது தன்னிலை இழக்காமலும் இருக்க வேண்டியது அவசியமானது என்பதே இந்த தத்துவம் போதிக்கும் பாடமாகும். இந்த அறிவுரைக்கு மிகச்சிறந்த உதாரணமாக விளங்குபவர் தமது நெடிய அரசியல் வாழ்க்கையில் பலமுறை முதலமைச்சராகவும் , எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்து வரும் திரு. கருணாநிதி அவர்கள் ஆவார் . 
             மிகச்சிறந்ததொரு அரசியல்வாதியாகவும், பொதுநல தொண்டராகவும் இருந்து வரும் திரு. கருணாநிதி அவர்கள் தம்மை சாமான்யமானதொரு அரசியல்வாதியாக வெளிப்படுத்திக்கொண்டது இரண்டாவது முறை தேசிய முற்போக்கு கூட்டணி அரசு அமைத்த பொழுது புதுடில்லியில் முகாமிட்டு தமது குடும்பத்தாருக்கும், கட்சிக்காரர்களுக்கும் மந்திரி பதவிக்காக பேரம் பேசிய போதாகும் .  அதுவே அவரது வாழ்க்கையில் அடைந்த மிக தாழ்வான நிலை என்று இப்பொழுது டெசோ மாநாட்டை கூட்டியமைக்காக பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்களை சந்திக்கும் பொழுது குறிப்பிடவேண்டியுள்ளது.

Tuesday, 7 February 2012

தமிழ் திரைப்படத்துக்கு ஆஸ்கார் பரிசு

தமிழ் திரைப்படங்களுக்கு ஆஸ்கார் பரிசு கிடைக்க வாய்ப்பு உள்ளதா?

நிச்சயமாக. முதலில் மூணு சண்டை, நாலு பாடல், அரை மணி நேரம் காமெடி என்று சூத்திரப்படி (பார்முலா) படமெடுப்பதை கைவிட வேண்டும், அப்பறம் ஹீரோவுக்காஹா கதை எழுதுவதை தள்ளி வைக்க வேண்டும். இப்படி சில சிறிய சுலபமான மாற்றங்களை செய்தால் தமிழ் திரைப்படங்களுக்கு ஆஸ்கார் பரிசு கிடைக்க  நிச்சயம் வாய்ப்பு உள்ளது.


Friday, 13 January 2012

கேள்வி பதில்

இந்தியா டுடே ஜனவரி ௧௮ இதழின் முகப்பு கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ள திருப்பமும் திசையும் என்னும் செய்தி தொகுப்பின் பலகணியில்  பின்வரும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கட்சியிலும் , ஆட்சியிலும் அதீத தலையீடு செய்த உடன் பிறவா சகோதரி சசிகலா மற்றும் அவரது உறவினர்களை வெளியேற்றிய பிறகு முதல்வர் ஜெ.ஜெயலலிதா எந்த திசையில் பயணிப்பார்?

இந்த கேள்விக்கான பதிலை தெரிவிக்க நீங்கள் எனக்கு ஒரு குறிப்புதவி செய்யவேண்டும். அதாவது இதுவரையிலும் அவர் எந்த திசையில் பயணம் செய்து கொண்டிருந்தார் என்பதே அது.

Tuesday, 10 January 2012

ஒய் திஸ் கொலவெறி

நிச்சயமாக இந்த தலைப்புக்குரிய விஷயம்  நடிகர் தனுஷ் இயற்றி பாடிய பாடல் பற்றிய திறனாய்வு இல்லை. ஆனால் கடலூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மக்களின் வாழ்வாதாரங்களை சிதைத்து சின்னாபின்னமாக்கிய தானே புயலின் கொலவெறி பற்றியும் அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் காலதாமதம் செய்து வரும் மத்திய மாநில அரசுகளின் மெத்தனமான போக்கை கண்டித்து சாலை மறியல் போன்ற ஏராளமான போராட்டங்களில் ஈடுபட்டு வரும் பொதுமக்களின் (கொ)கலவெரி பற்றியும், தனது கர்ப்பிணி மனைவி நித்யாவின் மரணத்திற்கு காரணமாயிருந்ததாக நினைத்து தூத்துக்குடி பெண் மருத்துவர் சேதுலக்ஷ்மியின் கொலை செய்த மகேஷ் மற்றும் அவருடைய கூட்டாளிகளின் கொலவெறி பற்றியும் அதனை தொடர்ந்து தங்கள் சுயநலத்திற்காகவும் , பாதுகாப்பிற்காகவும் தாங்கள் மேற்கொண்ட தொழிலின் இலட்சியத்தையும் , சிறப்பையும் தள்ளிவிட்டு அப்பாவி நோயாளிகளை சிரமத்திற்குள்ளாக்கிய மருத்துவ சங்கத்தினரின் கொலவெறி வேலைநிறுத்தம் பற்றியும் , தூய்மையான அரசியல்வாதியாகிய முதலமைச்சர் ஜெயலலிதாவை இழிவு படுத்தும் நோக்கில் ஆதாரமற்ற சில விஷயங்களை வெளியிட்டதாக கூறி நக்கீரன் பத்திரிகை அலுவலகத்தை முற்றுகையிட்டு கலவரத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளின் கொலவெறி பற்றியும் , (முல்ல)பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு மற்றும் பொதுமக்களின் நிலையில் குழப்பத்திற்கிடமிருந்தபோதிலும் அதனை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள், அரசியல் கட்சிகள் ஊடகங்கள் தங்கள் ஆதாயத்திற்கேற்ப பொதுமக்களின் கொலவெரிக்கு -கடைகளை சூறையாடுவது, பக்தர்களை தாக்குவது போன்ற - பக்கபலமாயிருப்பது போன்ற விஷயங்களை விவாதம் செய்யவேண்டியே இந்த  தலைப்பில், இப்படியொரு திறனாய்வு செய்ய நேர்ந்தது.