ஒரு கையிலுள்ள ஐந்து விரல்களும் ஒன்று போல இருப்பதில்லை என்னும் வுவமை நாம் காணக்கூடிய உலகின் தன்மையை மிக சிறப்பாய் உணர்த்தக்கூடியது ஆகும். ஆனால் இதுவே எப்போதும் நிலையான அளவீடும் இல்லை செரிவானதும் அல்ல.
Friday, 29 July 2011
Tuesday, 26 July 2011
சட்டமும் திட்டமும் செல்லும் இடம்
தகவலறியும் உரிமை சட்டம் , அனைவருக்கும் கல்வி சட்டம் ஆகிய சட்டங்களை தொடர்ந்து தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் ஒன்றை பாராளுமன்ற மழைக்கால கூட்ட தொடரில் கொண்டு வர உத்தேசித்திருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது . ஏற்கெனவே பொது விநியோக திட்டத்தின் கீழ் மத்திய அரசால் கொள்முதல் செய்யப்பட்டுள்ள கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள லட்சக்கணக்கான டன் உணவுபொருட்கள் மக்கிபோய் உணவுபொருட்களை உற்பத்தி செய்த விவசாயிகளின் ஆன்மாவையும் பசிக்கு உணவில்லாத ஏழை மக்களின் மனசாட்சியையும் துன்புறுத்தும் விதமாக நடந்து கொண்டு வருவது அனைவரும் நன்கறிந்த விஷயமாகும் . எந்த சட்டமானாலும், திட்டமானாலும் மக்களுக்கு பயனுறும் வண்ணம் மக்களை சென்றடைய வேண்டியதே இப்போதைய தேவையாகும்.
Friday, 22 July 2011
க்நோம்ஸ் ஆப் இந்துஸ்தான்
க்நோம்ஸ்ஆப் ஜுரிச் என்பது ஜுரிச் நகரின் பிசாசுகள் என்ற பெயரில் ஸ்விஸ் வங்கி அதிகாரிகளை குறிக்கும் நகைச்சுவை சொற்றொடராகும் . ஸ்விஸ் வங்கிகளில் முதலீடு செய்துள்ள அரசியல்வாதிகள் அதிகாரிகள் பணக்காரர்கள் ஆகியோரின் கருப்பு பணம் பற்றிய அளவுகளில் வேறுபாடு இருந்தாலும் சுவிஸ் அதிகாரிகள் கருப்பு பணம் பற்றிய தகவல்களை வெளியிடுவதற்கும் உரிமை மாற்றம் செய்வதற்கும்முன் வந்துள்ள நிலையில் இந்திய அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அதற்கு முன்வராதிருக்கும்போழுது அவர்களை க்நோம்ஸ் ஆப் இந்துஸ்தான் என்று ஏன் அழைக்ககூடாது?
Subscribe to:
Comments (Atom)