Thursday, 17 November 2011

தமிழகத்தின் மின் பற்றாக்குறையை சமாளிப்பது எப்படி?

தமிழ்நாட்டில் கூடங்குளம் அணு மின் நிலைய திட்டத்தை நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக சொல்லப்படும் காரணங்களில் ஒன்று தமிழகத்தின் மின் பற்றாக்குறையை சமாளிக்க இந்த திட்டம் அவசியமானது என்பதாகும். தமிழகத்தின் தற்போதைய மின் தேவை 11,500* மெகாவாட்கள் என்றும் இதில் 9,000 மெகாவாட்கள் மட்டுமே தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கிடைப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் 2,500 மெகாவாட்கள் மின் பற்றாக்குறை நிலவி வருவதாகவும்  இதனாலேயே மின்வெட்டு அமல் செய்யப்படுவதாகவும்  கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் நெய்வேலியில் அமைந்துள்ள மத்திய அரசின் 4 மின் நிலையங்களில் இருந்து 4,000 மெகாவாட்கள் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதிலிருந்து 25 சதவீதம் அதாவது ௧௦௦1,000 மெகாவாட்கள் மட்டுமே தமிழகத்துக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு எஞ்சியுள்ள 3,000 மெகாவாட்கள் மின்சாரம் ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநில மின் திட்டத்திற்கு வழங்கப்படுகிறது. நெய்வேலியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திலிருந்து கூடுதலாக 1,500௦௦ மெகாவாட்கள் தமிழகத்துக்கு வழங்கினாலே தமிழகத்தின் மின் பற்றாக்குறையை முழுவதுமாக சமாளிக்க முடியும். இதனை செயல் படுத்த விரும்பாத மத்திய, மாநில அரசுகள் கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் 2,000 மெகாவாட்கள் மின்சாரத்திலிருந்து  தமிழகத்திற்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ள 900மெகாவாட்கள் மின்சாரத்தின் மூலம் தமிழகத்தின் மின் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என்று கூறுவதை எப்படி நம்ப முடியும்?
*புள்ளி விபரங்கள் தோராயமானவையாகும்

எமக்கு தொழில் கனவு

எல்லா மனிதர்களும் கனவு காண்பதாக விஞ்ஞான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏராளமான மனிதர்கள் தங்கள் லட்சியத்தை பற்றி கனவு காண்கிறார்கள் அதை அடையும் வழிமுறைகளை பற்றி கனவு காண்கிறார்கள், அதில் வெற்றியும் அடைகிறார்கள் ஆனால் எனக்கு கனவு காண்பதே வாழ்க்கையாகி போனது தான் விந்தை.

Monday, 14 November 2011

அடிப்படை மாற்றம்

ஒரு கையிலுள்ள ஐந்து விரல்களும் ஒன்று போல் இருப்பதில்லை என்கிற விஷயம் உலகிலுள்ள வேறுபாடுகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் விளக்குவதற்கு மிகச்சிறந்த ஒரு உவமையாக கையாளப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஐந்து விரல்களுக்குள் சிறப்பான ஒன்றை தேர்வு செய்ய முடியுமா?

Saturday, 5 November 2011

மகத்தானதொரு செய்தி உணவு

உணவு ஆர்வலர்களுக்கு உற்சாகமூட்டும் மகத்தானதொரு செய்தி ஒன்றை  நோபல் குழு அறிவித்துள்ளது. நோபல் கொண்டாட்ட சிறப்பு விருந்தினை புதுடில்லி மற்றும் உள்ளூர்களிலேயே(தலை நகரங்கள் மட்டும் ) ரூ8,000/ விலையில் வழங்க முடிவு செய்துள்ளது. இது சில சக்தி வாய்ந்த பெரிய நிறுவனங்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களிடையே மட்டும் சிறிது ஆட்சேபனையையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தி இருக்கும் என்று நம்புகிறேன். கட்டுப்பாடற்ற சந்தையில் இரண்டு அல்லது மூன்று மடங்கு செலவு பிடிக்கக்கூடிய அல்லது வருமானம் ஈட்டக்கூடிய மிகச்சிறப்பானதொரு விருந்தினை இவ்வளவு மலிவான விலையில் விற்கலாமா என்பதே அவர்கள் ஆட்செபனையின் காரணமாக இருக்கக்கூடும்.


Friday, 4 November 2011

2,76000,0000000

   மேலே குறிப்பிட்டுள்ள எண் எவ்வாறு தோற்றமளிக்கிறது என்று நீங்கள் உணர்கிறீர்கள்? மேலே குறிப்பிடப்பட்டுள்ள எண் அதன் கணக்கீட்டு அலகிற்கு ஏற்ப பகுப்பு செய்யப்பட்டுள்ளது. அதாவது இரண்டு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி என்று படிக்கலாம். இதே என்னை நீங்கள் பில்லியன் கணக்கில் வெளியிட விரும்பினால் பின் வருமாறு பகுப்பு செய்யலாம். 2,760,௦௦௦௦௦௦௦௦௦000000000 அதாவது இரண்டாயிரத்து எழுநூற்று அறுபது பில்லியன். Like it?